பல்வேறு மாற்றங்களுடன் தொடங்கவிருக்கும் ஆகஸ்ட் மாதம்!! மக்களுக்கு நன்மையா? தீமையா?

0
104
August is about to start with many changes!! Good for people? Evil?

பல்வேறு மாற்றங்களுடன் தொடங்கவிருக்கும் ஆகஸ்ட் மாதம்!! மக்களுக்கு நன்மையா? தீமையா?

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை  மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.  மேலும் தக்காளி, சின்ன வெங்காயம்,  அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின்  விலை நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு தமிழக அரசு பல்வேறு ஆலோசனை கூட்டத்தை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு ரேஷன் கடை மூலம் தக்காளியை கொடுத்து வருகிறது. அதனையடுத்து உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு உணவு பொருட்களை அதிக அளவு இறக்குமதி செய்ய வேண்டும். மேலும் நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தால் சில உணவு பொருட்களின் விலை அதிகரித்திருந்து.

இந்த நிலையில் ஜூலை மாதம் முடிய இன்னும் மூன்று நாட்கள்  மட்டுமே உள்ளது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் விலைவாசி, பல விதிகளில் மாற்றம் உள்ளது என்று மத்திய அறிவித்துள்ளது. அந்த மாற்றத்தில் காசோலை தொடர்பான விதி, வங்கி விடுமுறை, சிலிண்டர் விலை, ஐடிஆர் நிரப்பினால் அபராதம் போன்ற மாரங்கள் வர உள்ளது.

அதனையடுத்து பேங்க் ஆப் பரோடோ வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் வங்கியில் காசோலையில் புதிய மாற்றம். அதில் 5 லட்சம் மேல் காசோலைகளை செலுத்துவதற்கு ஊதிய முறை அவசியமாக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் பல பண்டிகை நாட்கள் வருவதால் பளிவேறு மாநிலங்களில் மொத்தம் 18 நாட்கள் வங்கிகள் மூடப்படுகிறது.

அதனையடுத்து ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்த்திலும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அது போல ஆகஸ்ட் மாதமும் சிலிண்டர் விலை அதிகரிக்க உள்ளது. இதனை தொடர்ந்து ஐடிஆர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்குக்கான காலக்கெடு ஜூலை 31 ஆம் தேதி முடிவடைய உள்ளது. மேலும் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் அபதாரம் செலுத்த வேண்டி இருக்கும். இது போன்று பல மாற்றங்கள் ஆகஸ்ட் மாதம் வர உள்ளது.