நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜயகாந்த் அவர்கள் சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த அரசியல்வாதியாகவும் மக்களுடைய மனதில் இன்றளவும் நீங்காமல் நிறைந்து இருக்கிறார். தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கை முதல் இறுதி வரை பிறருக்கு உதவும் மனப்பான்மையையே பெரிதாக கொண்டவர் விஜயகாந்த் என்பதில் யாருக்கும் எந்தவித ஐயமும் கிடையாது. அப்படிப்பட்ட அவர் இறந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவருடைய குடும்பத்தில் 2 சுப நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதலில், விஜயகாந்த் அவர்களின் மூத்த மகனான விஜய பிரபாகரன் அவருக்கு திருமண முடிவானது மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தம்பதியினரின் மூத்த மகனான விஜய பிரபாகரனுக்கு பிரபல தொழிலதிபரின் மகள் கீர்த்தனா என்பவருடன் 2019 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதன் பின் அடிக்கடி விஜய பிரபாகரனின் தந்தையான விஜயகாந்த் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இறந்து தற்பொழுது ஓராண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதை அடுத்து இவர்கள் இருவருக்குமான திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இரண்டாவதாக, விஜயகாந்த் அவர்களுடைய கனவு இல்லம் 20 சதுர அடியில் போரூரில் உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வந்த நிலையில் விஜயகாந்த் அவர்களின் மரணத்தால் இதன் கட்டுமான பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் துவங்கப்பட்ட கட்டுமான பணிகள் தற்பொழுது நிறைவடைந்த நிலையில் இந்த வீட்டின் கிரக பிரவேசமானது தற்பொழுது நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கூடிய விரைவிலேயே இது குறித்த தகவல்கள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.