Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆட்டோ மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! மூன்று சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

Auto and truck collide head-on! 9 killed, including three boys!

Auto and truck collide head-on! 9 killed, including three boys!

ஆட்டோ மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! மூன்று சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

அசாம் மாநிலத்தில் அசாம் – திரிபுரா எல்லையை ஒட்டிய கரீம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பதர்கண்டி என்ற இடத்தில உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வேகமாக சென்று கொண்டிருந்த லாரி மற்றும் அதன் எதிரே வந்த ஆட்டோ ரிக்க்ஷாவின் மீது மிக பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் ஆட்டோ ரிக்க்ஷாவில் பயணம் செய்த 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் சத் பூஜையை முடித்து விட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த விபத்தில் இறந்தவர்களின் உடல்களை போலீசார் கரீம் கஞ்ச் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த கோர விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் ஆட்டோ ரிக்க்ஷா முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. பூஜை முடிந்து விட்டு  பலரும் ரிக்க்ஷாவில் வந்திருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.

Exit mobile version