தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்!
சென்னை கோட்டத்தில் மொத்தமாக 160 ரயில் நிலையங்கள் உள்ளது.இந்த ரயில் நிலையில் பயணிகள் எளிதாக ரயில் டிக்கெட் பெறுவதற்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இவ்வாறு வைக்கப்பட்டுள்ள சில ரயில்நிலையங்களில் உள்ள எந்திரங்கள் பழுதடைந்துள்ளது.அதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை கோட்டத்தில் வரும் ரயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கு எழும்பூர், தாம்பரம், சென்ட்ரல், கடற்கரை, அம்பத்தூர், கிண்டி, பூங்கா, செங்கல்பட்டு, ஆவடி, பெருமாள்பூர், கோட்டை, பல்லாவரம், நுங்கம்பாக்கம், திருவள்ளூர், பேசின்பிரிட்ஜ், வில்லிவாக்கம், கோடம்பாக்கம், பரங்கிமலை, சூலூர்பேட்டை ஆகிய 19 ரயில் நிலையங்களில் 34 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மீதமுள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் படிப்படியாக அமைக்கப்படும்.வருகிற ஏப்ரல் மாதம் இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பழுதடைந்த தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்களை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இந்த தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் பயன்படுத்துவதன் மூலமாக டிக்கெட் கவுண்டர்களின் கூட்ட நெரிசல் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எழும்பூர்,கடற்கரை, மாம்பலம்,கிண்டி,தாம்பரம் உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களால் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றனர்.