திராவிட கழகத்தினரை தெரிக்கவிட்ட ஆவணி அவிட்டம்! பாரம்பரியத்தை மீட்கும் வன்னியர்கள் பூணூல் அணியும் விழா

0
667
Avani Avittam 2020 Vanniya Kula Kshatriya Poonal Function

திராவிட கழகத்தினரை தெரிக்கவிட்ட ஆவணி அவிட்டம்! பாரம்பரியத்தை மீட்கும் வன்னியர்கள் பூணூல் அணியும் விழா

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பெரியாரிய கொள்கை உடையோர் பார்ப்பனியத்தை எதிர்க்கும் விதத்தில் பல்வேறு நூதன போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் இதில் ஒரு போராட்டமாக பிராமணர்கள் பூணூல் அணியும் நாளான ஆவணி அவிட்டத்தன்று தி.க.வினர் வயதான பிராமணர் ஒருவரை வழிமறித்து அவரின் பூணூலை அறுத்தெறிந்த நிகழ்வுகளும் கடந்த காலங்களில் பலமுறை நடந்தேறியுள்ளது.

ஆனால் சமீபக காலமாக பிராமணர்களின் பூணூலை அறுக்கும் நிகழ்வானது முழுவதும் குறைந்துள்ளது. அதற்கு காரணமாக கருதப்படுவது என்னவென்றால் தமிழகத்தில் பழம்பெரும் சமுதாயமான வன்னியகுல ஷத்ரியர்கள் அவர்களுடைய பாரம்பரியத்தை மீட்கும் வகையில் தம் குல வழக்கமான பூணூல் அணியும் வழக்கத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட பிராமணர்கள் வன்னியர்களையும் தங்களுக்கு ஆதரவாக வைத்து கொண்டு திராவிட கழகத்தினரை எதிர்த்து அறைகூவல் விடுத்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது,இத்தனை வருடங்களாக பூணூல் என்பது பிராமணர்கள் அணியும் ஒரு விடயம் என்றே நாம் பெரும்பாலோனோர் அனைவரும் அறிவோம். ஆனால் பூணூல் என்பது பிராமணர்களுக்கானது மட்டுமல்ல, வன்னியர் குல சத்ரியர்களுடைய பாரம்பரிய குல வழக்கம் என்று கூறி தமிழ்நாட்டின் சத்ரியர்களான வன்னிய குல சத்ரியர்களையும் பெரும்பாலான இடங்களில் பூணூல் அணிய வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து வன்னியகுல சத்ரிய அமைப்புகள் சார்ந்த முன்னோர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறிய தகவலானது, பூணூல் என்பது ஒவ்வொரு வன்னிய குல சத்ரியனும் குருகுலக் கல்விக்கு செல்லும் போது தனது குருவால் அணிவிக்கப்பெறும் நூல் தான் பூணூல். இது ஒவ்வொரு சத்ரியனும் தனக்கான கடமைகளை நினைவுபடுத்திக்கொள்ள அடையாளமாக அணிவிக்கப்படுகிறது.

தமிழகத்தின் பழம்பெரும் சமுதாயமான வன்னிய குல சத்ரியர்களான நாங்கள் மன்னராட்சி காலம் தொட்டு, ஆங்கிலேயர் ஆட்சிகாலம் வரை பூணூல் அணிந்திருந்தோம், ஆனால் சுதந்திரத்திற்குப் பின் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பின் நிலங்களை இழந்து உழுகுடிகளாக மாறிப்போனதால் இந்த பூணூல் அணியும் பாரம்பரியத்தை கைவிட்டுவிட்டோம். ஆகையால் இழந்துவிட்ட எங்கள் பாரம்பரியத்தை மீட்கும் விதமாக மீண்டும் பூணூல் அணியும் பழக்கத்தை கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து விழாவாக நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் கடந்த இரண்டு வருடங்களாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த பூணூல் விழா போன வருடம் சிதம்பரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தொண்டி, மற்றும் மயிலாடுதுறை ஆகிய ஆறு இடங்களில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 12 இல் சிறப்பாக நடந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வருடம் கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருவதால் இந்த ஆவணி அவிட்டத்தில் வன்னிய குல ஷத்ரியர்கள் அனைவரும் அவரவர் வீட்டிலேயே பூணூல் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வன்னியர்கள் தங்களுடைய குல வழக்கத்தை மீண்டும் கையில் எடுத்துள்ள காரணத்தினாலேயே பிராமணர்கள், தங்களை தொடர்ந்து இழிவுபடுத்திவரும் தி.க.வினரிடமிருந்து தங்களைக் காக்க சத்ரியர்களான வன்னியகுல சத்ரியர்கள் வருவார்கள், முடிந்தால் அவர்களின் பூணூலை அறுத்துப்பாருங்கள் என்று சமீபத்தில் அறைகூவல் விடுத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் வன்னியர்களும் பூணூல் அணிவதை கண்ட திராவிட கழகத்தினரும் நிலைமையை உணர்ந்து கொண்டு இனி பூணூல் அறுக்கும் போராட்டம் சரிபட்டு வராது என ஒதுங்கியுள்ளனர்.