ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதால் ஏற்படும் கண் பாதிப்பை குறைக்க எளிய வழி

0
98

உங்கள் கண்களுக்கு எந்த பிரச்சினையும் வராமல் இருக்க
ஸ்மார்ட் போனை இந்த முறையில் உபயோகித்துப் பாருங்கள்.

இக்காலகட்டத்தில் அனைத்து வயதினரும் ஸ்மார்ட்போன்கள் லேப்டாப்கள் போன்ற மின்னணு சாதனங்களை அதிகம் பயன்படுத்துவதால் கண் எரிச்சல், கண் புற்றுநோய், பார்வைக்குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 18 தடவை கண்
சிமிட்டுவான் என்பது ஆய்வின் அறிக்கையாகும்.ஆனால் இதுபோன்ற சாதனைகளை உபயோகிப்பதால் ஒரு மனிதனின் சராசரி கண் சிமிட்டுதலின் எண்ணிக்கை முற்றிலுமாக குறைகிறது.

டிவி பார்க்கும் போது அல்லது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பொழுது சராசரி கண் சிமிட்டுதல் எண்ணிக்கை பதினெட்டில் இருந்து 5 ஆக குறைகிறது. இதனால் கண்னின் ஈரத்தன்மை முற்றிலும் குறைந்து விடுகிறது. கண்னின் ஈரத்தன்மை குறையும் பட்சத்தில் கண் எரிச்சல் கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.

இக்காலகட்டத்தில் ஒருவர் டிவி பார்க்காமலும், ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாமல் இருப்பது கடினம் ஆனால் அதை சிறிது சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் கண் பிரச்சினையில் இருந்து குறைந்தபட்சமாக விடுபடலாம் அது என்ன வழிகள் என்று இப்பதிவில் காணலாம்.

உங்கள் ஸ்மார்ட் போனை முகத்திற்கு மிகவும் அருகில் அது மிகவும் தூரத்தில் வைத்து பயன்படுத்துவது என இரண்டுமே கண்ணீருக்கு பிரச்சனை தரக்கூடியவை. முகத்தில் இருந்து சுமார் 16 இன்ச் தூரத்தில் வைத்து ஸ்மார்ட் போனை பயன்படுத்த வேண்டும். இதனால் கண் நேரடியாக பாதிக்கப்படுவது குறையும்.

இரண்டாவதாக ஸ்மார்ட்போன்கள் அல்லது லேப்டாப்களில் font-size மீடியமாக வைத்து கொள்ள வேண்டும். ரொம்பவும் சிறிதளவில் வைத்து உற்று நோக்கிப் படிப்பதால் கண்ணில் எரிச்சலும் வலியும் ஏற்படும்.

அடுத்து இரவில் போன்களை பயன்படுத்தும்போது லைட் வெளிச்சம் இல்லாத அறைகளில் உட்கார்ந்து பயன்படுத்துவதால் போனின் டிஸ்பிளே இல் இருந்து வரும் அல்ட்ரா ப்ளூ கதிர்கள் நம் கண்களை மிகவும் பாதிக்கும். இதுவே கண்ணில் கேன்சர் வருவதற்கான காரணம் ஆகும். எனவே முடிந்த அளவிற்கு லைட் உள்ள அறையிலேயே போன்களை பயன்படுத்த வேண்டும்.

அவ்வாறு நைட் உள்ளறையில் பயன்படுத்த முடியவில்லை என்றால் போனின் Reading mode or night mode or blue Light filter – option -யை படுத்தவேண்டும். இந்த ஆப்ஷன் அல்ட்ரா ப்ளு நம் கண்களை தாக்குவதில் இருந்து சிறிதளவு காக்கும்.

லேப்டாப் அல்லது windows பயன்படுத்துபவர்கள் flux என்னும் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து Cntrl+page down -யை click செய்தால் உங்கள் லேப்டாப் அல்லது விண்டோஸ் டிஸ்பிலே சைஸ் சிறிதாக மாறி அதன் பின்னர் brightness குறைந்து விடும். இவ்வாறு இரவு நேரங்களில் பயன்படுத்தலாம்.

தொலைக்காட்சி பார்ப்பவர்கள் தொலைக்காட்சியின் மிக அருகில் உட்கார்ந்து பார்க்காமல் குறிப்பிட்ட இடைவெளியில் உட்கார்ந்து பார்க்க வேண்டும்.

தொடர்ந்து இது போன்ற மின்னணு சாதனங்களை உபயோகிக்கும் போது கண்ணீருக்கு சிறிது இடைவெளி தர வேண்டும்.எவ்வாறென்றால் இரு உள்ளங்கையும் தேய்த்து சிறிது நேரம் கண்ணில் ஒற்றி எடுக்க வேண்டும். இது கண்ணீருக்கு சிறிது ரிலாக்சேஷன் தரும்.

இவ்வாரக மின்னணு சாதனங்களை பயன்படுத்திப்பாருங்கள் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.