Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐயோ அம்மா அடிக்காதிங்க! பொதுமக்கள் தந்த தர்ம அடி!

Aw, Snap! Dharma feet given by the public!

Aw, Snap! Dharma feet given by the public!

ஐயோ அம்மா அடிக்காதிங்க! பொதுமக்கள் தந்த தர்ம அடி!

சேலம் மாவட்டம் வாழப்பாடியிலுள்ள ஏத்தாப்பூர் என்ற ஊருக்கு அருகே செக்கடிப்பட்டி என்ற கிராமம் உள்ளது.அங்கு ராஜேஸ்வரி என்பவர் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.அங்கு துணி வாங்குவதுபோல்  ஐந்து வாலிபர்கள் முகக்கவசம் அணிந்து வந்துள்ளனர்.இதையறியாத ராஜேஸ்வரி அவர்களுக்கு துணிகளை எடுத்து காண்பித்துள்ளார்.

அந்த வாலிபர்களும் நன்றாக ராஜேஸ்வரியிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.பேச்சு கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த வாலிபர்கள் ராஜேஸ்வரியின் கழுத்தில் இருந்த தங்க சங்கலியை பறித்துக்கொண்டு தப்ப முன்றுள்ளனர்.ராஜேஸ்வரி பலமாக கத்தியதில் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த ஐந்து வாலிபர்களில் ஒருவரை பிடித்துவிட்டனர்.

அந்த வாலிபரை கம்பத்தில் கட்டி சரமாரியாக ஊர் பொதுமக்கள்  தாக்கியுள்ளனர்.ஊர் பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி தாங்க முடியாமல் அந்த வாலிபன்  ஐயோ,அம்மா,அடிக்காதிங்க என அழ ஆரமித்துவிட்டான்.பின்பு ஊர் பொதுமக்கள் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் அந்த திருடனை ஒப்படைத்தனர்.

காவல் அதிகாரி விசாரித்ததில் நகை பறிப்பில் ஈடுபட்ட அந்த வாலிபர்  கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பது தெரியவந்துள்ளது.இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.இதனைத்தொடர்ந்து இவர் மற்றும் இவரது நண்பர்கள் ஊர் விட்டு ஊர் வந்து நகை பறிப்பு இம்மரியான குற்றங்களையே வேலையாக பார்த்து வந்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Exit mobile version