விழிபிதுங்கும் மத்திய அரசு! 18 வயதுக்கு தடுப்பூசி போட முடியா அவலம்!
கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது சுனாமி போல அதிக அளவில் பரவி வருகிறது.இந்த கொரோனாவின் 2-வது அலையானது மக்களை பெருமளவு பாதித்துள்ளது.மக்களின் நலன் கருதி கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.குறிப்பாக டெல்லி,மகாராஷ்டிரா பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.முக்கியமாக டெல்லி அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளது.
டெல்லி முழுவதும் இடுகாடுகளாக மாறியது போல காட்சியளிக்கிறது.தொற்றை குறைக்க சரியான வழிமுறைகளை பின்பற்றுமாறு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அதில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்படி தொடர்ந்து கூறி வருகிறது.இந்நிலையில் தமிழர் புத்தாண்டு அன்று 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா தமிழ்நாடு முழுவதும் நடந்தது.
அதனைத்தொடர்ந்து 18 வயதிலிருந்து 45 வயதிற்குள் உள்ளவர்களுக்கு நாடெங்கும் மே 1 முதல் தடுப்பூசி போடப்படும் என தெரிவித்திருந்தனர்.அதன்படி அத்தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கும் ஆன்லைன் புக்கிங் நடந்தது.அதில் பல ஆயிரம் கணக்கானோர் தடுப்பூசி போட முன்பதிவு செய்தனர்.முன்பதிவு செய்பவர்களுக்கு அவர் எந்த நாளில் தடுப்பூசி போட மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று அவரது செல்போனிற்கே குறுஞ்செய்தி அனுப்பப்படும் என கூறினர்.
ஆனால் போதுமான அளவு தடுப்பூசி இல்லா காரணத்தினால் தற்போது பல மாநிலங்களில் 18 வயதுக்கு மேல் தடுப்பூசி செலுத்தும் பணியை ஒத்திவைத்துள்ளனர்.அதுமட்டுமின்றி சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியதாவது,தற்போது தடுப்பூசி அதிக தட்டுப்பாடாக உள்ளது.18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடப்படும் தடுப்பூசி இன்றும் வந்து சேரவில்லை,அதனால் மத்திய அரசு கூறியதுபோல இன்று தடுப்பூசி போடும் திட்டம் இயலாத காரியம் ஆகும்.இவர்களுக்கான தடுப்பூசி எப்பொழுது வருகிறோதோ அப்போது போடப்படும் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றார்.
அதுமட்டுமின்றி கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் ஐதராபாத் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் மாதத்துக்கு 1.5 கோடி டோஸ்களை மட்டுமே தயாரிக்க முடியும்.நேற்று மாலை நிலவரப்படி மட்டும் நாடு முழுவதும் 2 கோடியே 50 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு செய்துள்ளனர்.தேவை அதிகமாக உள்ள சூலில் இவ்வாறு குறைந்த அளவு உற்பத்தி செய்தால் எவ்வாறு சமாளிக்க முடியும் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.