Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்…! விழிபிதுங்கி நின்ற காவல்துறையினர்…!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களை பற்றி முகநூலில் தகாத முறையில் பதிவு பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்து காவல் நிலையத்தை அக்கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த முன்னாள் பாஜக நகர உறுப்பினர் குட்டி சண்முகம் இவரது வலைதள பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பற்றி அவதூராக பதிவு வெளியிட்டு இருந்ததை பகிர்ந்து சண்முகத்தை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்து அந்த கட்சியை சார்ந்தவர்கள் ஆம்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறையினர் அவரை கைது செய்ய மறுத்துவிட்டதால் அந்த கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் அங்கு வந்த போலீசார் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் அதன்பின்பு வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுமென்று காவல்துறையினர் உறுதியளித்ததன் பெயரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Exit mobile version