நம் நாட்டில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவதற்கு உயரிய விருதாகிய கேல் ரத்னா விருது வழங்கப்படும். இந்த ஆண்டு அந்த உயரிய விருதான அது நம் தமிழகத்தில் உள்ள சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு இவருக்கு வழங்கப் படுவதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.
அதுபோல தமிழகத்தை சேர்ந்த தடகள வீரரான அஜித்குமாருக்கு தயான்சந்த் இன்னும் விருதும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?
பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு மத்திய அரசின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்றொரு தடகள வீரரான ரஞ்சித் குமாருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்படவிருக்கிறது.
தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்திடும் இவர்கள் இருவர் உட்பட விருது பெறும் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.