கல்லுரி மாணவிகளுக்கு அசத்தல் திட்டம்! அரசு வெளியிட்ட குட் நியூஸ்!
இந்தியாவில் முதன்மை மாநிலமாக விளங்கி வருவது கேரளா தான்.கல்வி,அறிவியல்,முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழ்வது கேரளா.அதுமட்டுமின்றி பெண் கல்வி,பெண்களின் சமூக முன்னேற்றம்,பாலின சமத்துவம் என அனைத்திலும் முற்போக்காக துணிச்சலுடன் சட்டம் கொண்டுவருவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகின்றது.
மேலும் தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களின் கல்வி திருமணத்திற்கு பிறகு கேள்விக்குறியாக மாறி வருகின்றது. இதற்கு தீர்வாக தற்போது கேரள அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் திருமணம் ஆன பெண்கள் கல்லூரிக்கு வரலாம் அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டமானது கேரளாவில் உள்ள கோட்டயத்தில் இயங்கி வரும் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் மூலம் பெண் கல்வி திருமணத்திற்கு பிறகு தடைப்படாமல் அவர்கள் தொடர்ந்து படிக்க உதவியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மகப்பேறு விடுப்பில் செல்லும் மாணவி தன் மகப்பேறு காலம் முடிந்த பிறகு மீண்டும் கல்லூரியில் தனது சக மாணவிகளுடன் இணைந்து அதே செமஸ்டரில் இல்லை அதற்கு அடுத்த செமஸ்டரிலேயே கல்வியை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் முதல் அல்லது இரண்டாவது பிரசவத்திற்கு மட்டுமே பொருந்தும்.மாணவிகள் மகப்பேறு விடுப்பிற்கு விண்ணப்பிக்கும்போது உரிய மருத்துவ சான்றிதழ் உடன் கல்லூரியின் முதல்வரிடமோ அல்லது நிர்வாக தலைமையிடம் விண்ணபித்து விடுப்பு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து பல்கலைக்கழக சிண்டிகேட் கர்ப்பம் மற்றும் டியூபெக்டமியை மருத்துவ ரீதியாக நிறுத்தும் மாணவிகளுக்கு 14 நாள் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.