Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை: தீர்ப்பின் முதல்கட்ட விபரம்

பாபர் மசூதி காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என உச்சநீதிமன்றத்தின் ஆரம்பகட்ட தீர்ப்பாக வெளிவந்துள்ளது

அயோத்தியில் பாபரால் மசூதி கட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் அதே நேரத்தில் மசூதிக்கு கீழ் ஒரு வழிபாட்டுத்தலம் இருந்ததாகவும், ஆனால் அது எந்த வழிபாட்டுத்தலம் என தொல்லியல்துறை சொல்லவில்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதிகள், தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை என்றும் கூறியுள்ளனர்.

மேலும் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக தொல்லியல் துறை சொல்லவில்லை என்றும், பாபர் மசூதிக்கு கீழே கண்டறியப்பட்ட கட்டுமானங்கள் இஸ்லாமியர்களின் கட்டுமானங்கள் அல்ல என்றும், காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ல் ராமர் சிலை வைக்கப்பட்டதாகவும், அயோத்தி தான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் நம்புவதை நம்புவதை மறுக்க முடியாது என்றும் மதங்களில் இருக்கும் நம்பிக்கையை உச்சநீதிமன்றம் மதிப்பதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த தீர்ப்பின் முழுவிபரங்கள் இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Exit mobile version