பிரேக்கிங்: அயோத்தி வழக்கின் தீர்ப்பு தேதி, நேரம் அறிவிப்பு!
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக இருதரப்பினர் கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு கடந்த பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2010-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ந் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் 16-ந் தேதி முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17-ந் தேதி ஓய்வு பெறுவதால் அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதாக கூறப்பட்டது
இந்த நிலையில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று வழக்கு பட்டியல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ளது
தீர்ப்பு வெளியானதும் அயோத்தியில் எத்தகைய சூழல் நிலவுமோ? என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் நிலவி வருவதாகவும் இதனால் சர்ச்சைக்குரிய நிலத்தின் அருகே வசித்து வரும் மக்கள் தற்காலிகமாக அந்த பகுதியை விட்டு வெளியேறியிருப்பதாகவும் கூறப்படுகிறது