ஆயுர்வேத முறையில் நுரையீரலில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றணுமா? அப்போ உடனே இதை பண்ணுங்க!!

0
429
Ayurvedic method to remove impurities from lungs? Then do this immediately!!

இதயம்,சிறுநீரகம் உள்ளிட்ட உள் உறுப்புகளை போன்று நுரையீரலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் காற்று மாசு,புகைப்பழக்கம்,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு முறை பழக்கத்தால் நுரையீரலின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கிறது.

நுரையீரலில் அதிகப்படியான நச்சுக் கழிவுகள் சேர்வதால் சுவாசிப்பதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.நுரையீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் தலைவலி,மூச்சு விடுவதில் கடும் சிரமம்,மார்பு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

அதிகப்படியான சளியால் நுரையீரலில் கிருமிகள் தேங்கி சிரமத்தை உண்டாக்கும்.எனவே நுரையீரலில் படிந்துள்ள அழுக்கு,கிருமிகள் நீங்க ஆயுர்வேதத்தை பின்பற்றுங்கள்.

*மஞ்சள் கிழங்கு – ஒன்று
*துளசி – ஒரு கப்
*திப்பிலி – 25 கிராம்
*ஆடாதோடை இலை – கால் கப்
*அதிமதுரம் – 25 கிராம்

நன்கு உலர்ந்த மஞ்சள் கிழங்கை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பவுடராக எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கப் உலர்ந்த துளசி இலைகளை மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக அரைக்கவும்.

அதேபோல் ஆடாதோடை இலையை நன்றாக உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ளவும்.பிறகு நாட்டு மருந்து கடையில் திப்பிலி பொடி 25 கிராம் மற்றும் அதிமதுரப் பொடி 25 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.

இப்பொழுது அகலமான கிண்ணத்தில் அரைத்து வைத்துள்ள மஞ்சள் தூள்,துளசிப் பொடி,ஆடாதோடை இலை பொடியை போட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.அடுத்து திப்பிலி பொடி மற்றும் அதிமதுரப் பொடியை அதில் கொட்டி நன்றாக மிக்ஸ் செய்து பாட்டிலில் கொட்டி சேகரித்து வைக்கவும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.பிறகு அரைத்து வைத்துள்ள மூலிகை பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து காய்ச்சி பருகி வந்தால் நுரையீரலில் தேங்கியுள்ள அழுக்கு,கிருமிகள் அனைத்தும் நீங்கும்.