வட இந்தியாவில் அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்!!
தமிழகத்தில் உருவாகினால் தமிழகத்தில் பொருளாதாரம் மேம்படும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தகவல்.
சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பவித்திரம் ஆயுர்வேத மருந்து என்ற பெயரில் 270 ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பதற்கு உரிமம் பெற்று முதல் கட்டமாக 27 மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கல்லூரியில் நடைபெற்ற அறிமுக விழாவில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கலந்து கொண்டு புதிய மருந்துகளை அறிமுகம் செய்தார் சாய்ராம் கல்வி குழுமங்களின் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமை வணிக அதிகாரி சதீஷ்குமார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் இயக்குனர் டாக்டர் வனிதா முரளி குமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த கலாநிதி வீராசாமிஎம்.பி கூறுகையில் ஆயுர்வேத மருத்துவம் தற்போது இந்தியாவில் வளர்ந்து வருகிறது பல லட்சம் கோடி ஆயுர்வேத மருந்துகள் விற்பனையாக வாய்ப்புகள் இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் வட இந்தியாவில் உள்ளது தமிழகத்தில் ஆயுர்வேத தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக வேண்டும் இது போன்ற நிறுவனங்கள் உருவாகினால் தமிழகத்தின் பொருளாதாரத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்றார்.
உலக அளவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் வர்த்தகம் சுமார் 5000 கோடி அளவிற்கு உள்ளது ஆயுர்வேத மருந்துகள் குறித்தும் ஆயுர்வேத மருத்துவ படிப்பு குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் இந்த துறை மேலும் வளர்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்தார்.