Medical:70 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு ஐந்து லட்சம் வரை இலவச மருத்துவம் காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்தது “ஆயுஷ்மான் பாரத்” திட்டம்.
நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களின் மருத்துவத்திற்கு உதவும் வகையில் இலவச காப்பீடு திட்டம் “ஆயுஷ்மான் பாரத்” இருந்து வருகிறது. மேலும் இந்த திட்டத்தை விரிவு படுத்தும் வகையில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு 5 லட்சம் வரையில் இலவசமாக மருத்துவம் வழங்கும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.
பிறந்த தேதி அல்லது ஆதார் அட்டையில் 70 வயதை கடந்தவர்கள் இந்த காப்பீடு திட்டத்திற்கு தகுதியானவர்கள். மேலும் மத்திய அரசின் மருத்துவத் திட்டம் (சிஜிஹெச்எஸ்) அட்டை, முன்னாள் ராணுவத்தினா் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (இசிஹெச்எஸ்), ஆயுஷ்மான் மத்திய ஆயுதப்படை திட்டம் ஆகியவற்றின் கீழ் மூத்த குடிமக்கள் தங்களின் மருத்துவக் காப்பீட்டைப் பெற்றிருந்தால் அவா்கள் அதே திட்டத்தில் தொடரலாம் அல்லது இத்திட்டத்துக்கு (பிஎம் – ஜேஏஒய்) மாறிக் கொள்ளலாம்.
தனியாா் மருத்துவக் காப்பீடு அல்லது மாநில காப்பீட்டுத் திட்டம் (இஎஸ்ஐ)ஆகியவற்றில் பதிவு செய்திருந்தாலும் அவா்களும் ஏபி பிஎம் – ஜேஏஒய் திட்டப் பலனை பெற தகுதி உள்ளவர்கள் ஆவர்.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் இத் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
இத் திட்டத்தில் விண்ணப்பிக்க அருகில் உள்ள ‘இ’ சேவை மையத்தில் http://www.beneficiary.nha.gov.in என்ற இணைய தளம் வழியாக பதிவு செய்யலாம். செல்போனில் PMJAY இணையதளம் அல்லது ஆயுஷ்மான் செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். ஆயுஷ்மான் கார்டுவைத்து இருப்பவர்கள் மீண்டும் புதிய கார்டு விண்ணப்பிக்க வேண்டும்.