அயோத்தியில் இராமர்கோயில் கட்டலாம் என தீர்ப்பு! மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் எல்.கே.அத்வானி
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இந்துக்களுக்கு சொந்தமான இடம் எனவும் அதில் இராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது தீர்ப்பு வழங்கி உள்ளது. இத்தீர்ப்புக்கு பெரும்பான்மையான தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில், அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்கான ’ராமஜென்ம பூமி’ பிரசார இயக்கத்தை தொடங்கிய அசோக் சிங்காலுக்கு உறுதுணையாக இருந்து ‘கரசேவை’ என்ற யாத்திரையை முன்னெடுத்துச் சென்றவர்களில் முதன்மையானவரும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி(92) அவர்கள் இரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்றம் அமர்வு இன்று வழங்கியுள்ள தீர்ப்பை நாட்டு மக்களுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
1990-ம் ஆண்டு அத்வானி நடத்திய ரத யாத்திரை அயோத்தியில் உள்ள இராமர் பிறந்த இடத்தில் சிறப்பான முறையில் இராமர் கோவில் கட்டுவதற்கான வழிவகையை இந்த ஒருமனதான தீர்ப்பின் மூலம் கிடைத்துள்ளதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய விடுதலை இயக்கத்துக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய இயக்கமான ராமஜென்ம பூமி இயக்கத்துக்கு எனது பணிவான பங்களிப்பும் இருக்க கடவுள் வாய்ப்பளித்ததை எண்ணி மனநிறைவு அடைகிறேன்.
காலம் கடந்து கொண்டே வந்த இராமர்கோயில்-பாபர்மசூதி விவகாரம் இன்றோடு முடிவடைகிறது. வேற்றுமைகளையும், கசப்புணர்வுகளையும் புறந்தள்ளிவிட்டு சமூகஒற்றுமை மற்றும் அமைதியை நிலைநாட்ட வேண்டிய நேரம் நமக்கு வந்துள்ளது என எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.