Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் பிஇ பிடெக் படிப்புகளுக்கு பகுதி நேர பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர பிஇ ,பிடெக் படிப்புகளில் சேர 2020-21 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

தமிழகத்தில் செயல்படும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி ,பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி, சிஐடி கல்லூரி ,மதுரை தியாகராஜர் கல்லூரி ஆகிய ஒன்பது கல்லூரிகளின் பகுதிநேர பிஇ,, பிடெக். படிப்புகள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இந்தக் கல்லூரியில் சேர கல்வித்தகுதியாக பிஇ ., பிடெக் படிக்க விண்ணப்பிப்போர் டிப்ளமோ படிப்பை முடித்து இரண்டு வருடங்கள் நிறைவேற்றி இருக்க வேண்டும். மேலும், இரண்டு ஆண்டுகள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து இருந்து வேண்டும். ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் பணியாற்றி தற்போது வேலையின்றி இருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பிஇ ., பிடெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க www.ptbe-tnea.com என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.ஆண்ட்ராய்டு செல்போன், கணினி, இணையதள வசதி இல்லாதவர்கள் தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களை வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய் 600 பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரூபாய் 300 செலுத்த வேண்டும்.

செயலாளர் பகுதிநேர பிஇ ., பிடெக். படிப்பு சேர்க்கை, கோயம்புத்தூர். என்ற பெயருக்கு வரைவோலையாக எடுக்க வேண்டும்.ஆன்லைனில் பூர்த்தி செய்த பின்னர் விண்ணப்பத்தை டவுன்லோட் (Download) செய்து கொள்ள வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு இணைத்து செயலாளர், பகுதி நேரப்படிப்பு மாணவர்கள் சேர்க்கை, கோயமுத்தூர் தொழில்நுட்ப கல்லூரி ,அவிநஷி ரோடு, கோயம்புத்தூர் – 641014 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பித்த நிலை பற்றிய செய்திகளை செப்டம்பர் 10 ஆம் தேதி அறிந்து கொள்ளலாம்.செப்டம்பர் 11 முதல் 13 ஆம் தேதி வரை ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களை ஆன்லைன் மற்றும் கணினி காணொலிக் காட்சி மூலமாக கேட்டு விளக்கம் பெறலாம்.செப்டம்பர் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் .

பிஇ ., பிடெக். படிப்புகளுக்கான விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி 30.8.2020 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

Exit mobile version