தமிழ் சினிமாவில் பா வரிசை இயக்குனர்கள்!! இந்த ஒரு எழுத்து தான் காரணமாம்!!

0
169
B series directors in Tamil cinema!! This one letter is the reason!!B series directors in Tamil cinema!! This one letter is the reason!!

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை பல இயக்குனர்கள் தங்களுடைய திறமைகளை பயன்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படங்களை இயற்றி வருகின்றனர். ஆனாலும் பா எழுத்தில் தொடங்கக்கூடிய பெயர் அமைந்த இயக்குனர் திரையுலகின் உச்சத்தில் மட்டுமின்றி ரசிகர்களின் உடைய மனதின் உச்சத்திலும் அமர்ந்திருப்பதற்கான காரணம் குறித்து காண்போம்.

பா வரிசை இயக்குநர்கள் :-

✓ பாலச்சந்தர்
✓ பாரதிராஜா
✓ பாலுமகேந்திரா
✓ பாலா
✓ பீம்சிங்

இவர்கள் அனைவரும் தமிழ் சினிமா துறையில் தங்களுக்கென தனிப்பாதையை வகுத்தவர்கள். இதில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. அவர்களுடைய படங்களுக்கென தனி நடை உண்டு. இப்படிப்பட்ட காரணங்களால் இவர்கள் இன்றளவும் தமிழ் சினிமா துறையில் கிரீடம் சுமந்து நிற்கின்றனர்.

பாலச்சந்தர் :-

அவரது படங்கள் தமிழ்சினிமாவின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. அவரது படங்களில் முக்கியமான படம் அந்த நாள். எந்த விதமான சண்டைக்காட்சிகளும், பாடல்காட்சிகளும் இல்லாமல் வந்த முதல் தமிழ்ப்படம் இதுதான். அதே மாதிரி முதல் ஆன்ட்டி ஹீரோவை அறிமுகப்படுத்தியதும் இந்தப் படம் தான்.

பாரதிராஜா :-

இவரது முதற்படமான 16 வயதினிலே திரைப்படத்தில் திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார். கிராமத்து திரைப்படம் என்ற புதிய வகையை உருவாக்க அப்போதைய நடைமுறையில் இருந்த காட்சிகளை உடைத்தார். பதினாறு வயதினிலே இப்போதும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

பாலு மகேந்திரா :-

ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர்.

பாலா :-

பாலா படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை நன்றாக வரைந்தார், மேலும் அவர் படத்தில் வரும் திருப்பங்கள் மற்றும் திருப்பங்களால் ரசிகர்களை கவர்ந்தார். பிதாமகன் வித்தியாசமான உணர்வுகளுடன் கலக்கிய படம் பார்வையாளர்களை ரசிக்க வைத்தது, மேலும் படத்தை நீண்ட நாட்களாக ரசிகர்கள் மனதில் நிற்க வைக்கும் வகையில் எமோஷனல் க்ளைமாக்ஸ் கொடுத்துள்ளார்.

பீம்சிங் :-

குடும்ப உறவுகள் பற்றிப் பேசும் படங்களை இயக்கினார். பெரும்பாலும் ‘பா’ என்ற எழுத்தை ஆரம்பமாகக் கொண்ட தலைப்புகளைத் தனது திரைப்படங்களுக்குச் சூட்டினார்.

இவ்வாறு ஒவ்வொரு இயக்குனரும் தனக்கென தனி பாதையை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் அதனையே பின்தொடர செய்தனர். தங்களுடைய படங்களை இயக்குவது மட்டுமின்றி செதுக்கவும் செய்ததால் இன்றளவும் அவர்களுடைய பெயர் இமயத்தின் உச்சியில் இருப்பது போல் ரசிகர்களின் மனதின் உச்சியில் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனினும் சினிமா துறையை பொருத்தவரை இந்த பா என்ற எழுத்து ஒரு மந்திரமாகவே பார்க்கப்படுகிறது.