Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் அப்பாஸை அடிக்கச் சென்ற பாபா லட்சுமணன்!! படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சண்டை!!

Baba Lakshmanan went to beat actor Abbas!! The fight on the shooting site!!

Baba Lakshmanan went to beat actor Abbas!! The fight on the shooting site!!

1996 ஆம் ஆண்டு வெளியான, ‘காதல் தேசம்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ்.இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் ஒருசில படங்களில் அப்பாஸ் நடித்திருந்தாலும், இவருக்கு சாக்லேட் ஹீரோ என்கிற இமேஜை பெற்று தந்தது கோலிவுட் திரை உலகம் முழுவதும் வளம்வந்தவர்.

தற்பொழுது, சரியான படவாய்ப்புகள் கிடைக்காததால், திரையுலகை விட்டு முழுமையாக விலகிய அப்பாஸ், தன்னுடைய மனைவி, மகன், மகளுடன் வெளிநாட்டில் செட்டில் ஆனார். தற்பொழுது இவர் நியூசிலாந்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கா துவங்கியவர் தற்பொழுது சொந்தமாக மெக்கானிக் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார்.

2001 ஆம் ஆண்டு, மம்மூட்டியை ஹீரோவாக வைத்து இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருந்த திரைப்படம் ‘ஆனந்தம்’. அண்ணன் – தம்பிகள் பாசத்தை மையமாக வைத்து, ஜனரஞ்சகமான குடும்ப கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், சுமார் 125 நாட்கள் ஓடி சாதனை செய்தது. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில், ஆர்.பி. சௌத்ரி தயாரித்திருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பில், நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் பிரபல காமெடி நடிகர் பாவா லட்சுமணன்.

இந்த படம் நான்கு அண்ணன் தம்பிகள் கொண்ட படமாக உருவாக்கப்பட்டு வந்த நிலையில், நால்வரையும் ஒன்றாக வைத்து காட்சி எடுக்க இயக்குனர் திட்டமிட்டு இருந்திருக்கிறார். அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் மம்முட்டி படப்பிடிப்பு தளத்திற்கு காலை 6 மணிக்கு தயாராகி வந்து விட்ட நிலையில், தம்பி கதாபாத்திரத்தில் நடிக்கும் அப்பாஸ் அவர்கள் 8 மணி ஆகியும் வராமல் தாமதமாக வந்துள்ளார்.

இதைப் பார்த்து கோபமான பாவா லட்சுமணன் அவர்கள், என்ன கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இருக்கீங்க என்று கேட்டுள்ளார். இதனால் கோபமான அப்பாஸ் அவர்கள் நான் அப்படித்தான் வருவேன் என திமிராக கூற, கோபம் வந்த பாவா லட்சுமணன் அவர்கள் அவரை அடிக்க சென்றுள்ளார். இது படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த நாளிலிருந்து அப்பாஸ் அவர்கள் நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததாக பாபா லட்சுமணன் அவர்கள் பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version