Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி: பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சால் பரபரப்பு

பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி: பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சால் பரபரப்பு

தமிழகத்தை பொருத்தவரை தந்தை பெரியார் பெரிதும் மதிக்கப்பட்டு வருகிறார். பெண் சுதந்திரம், ஜாதி ஒழிப்பு, மூடப்பழக்க வழக்கங்களுக்கு முடிவு கட்டுதல், ஆகியவை பெரியாரால் நடந்தது என பலர் நம்புகின்றனர். அனைத்து திராவிட கட்சிகளின் குருவாக பெரியார் இருந்து வருகிறார். இந்த நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஏற்கனவே பாஜக உள்ளிட்ட கட்சிகள் பெரியாரை விமர்சனம் செய்து வரும் நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் பெரியார் குறித்து கூறியபோது, ‘அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகிய இருவரையும் பின்பற்றுபவர்களை பற்றி தான் கவலை கொள்வதாகவும் அவர்களை கண்டு அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி என்று குறிப்பிட்ட பாபா ராம்தேவ், ராமர், கிருஷ்ணர் காலம் முதல் உயர் ஜாதியினர் மட்டுமே ஆட்சி செய்து வந்ததாகவும் அதன் பிறகு ஆதிதிராவிட மக்களும் இஸ்லாமியர்களும் ஆட்சிக்கு வந்ததாகவும் கூறி, அப்போதுதான் பெரியார் மக்களை தவறாக வழி நடத்தியதாகவும் விமர்சனம் செய்தார்

பாபா ராம்தேவின் இந்த விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவருக்கும் அவரது பதஞ்சலி நிறுவனத்திற்கும் எதிராக ஆயிரக்கணக்கான டுவீட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் பாபா ராம்தேவ் தனது கருத்தை திரும்ப பெற்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கைகள் விடப்பட்டு வருகிறது

Exit mobile version