Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பரபரப்பு: பிறந்த சில மணி நேரமான பச்சிளங்குழந்தை எரிந்த நிலையில் மீட்பு!! போலீசார் தீவிர விசாரணை!!

பரபரப்பு: பிறந்த சில மணி நேரமான பச்சிளங்குழந்தை எரிந்த நிலையில் மீட்பு!! போலீசார் தீவிர விசாரணை!!

கடலூர் மாவட்டத்தில் நெய்வேலியில், இந்திராநகர் பகுதி அருகே குப்பை ஒன்றில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் உடலானது எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிறந்து சிலமணி நேரமே ஆன குழந்தையை மண்ணெண்ணை ஊற்றி எரித்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தை ஆணா, பெண்ணா ?என்று விசாரணையும் நடைபெற்று வருகிறது.

குழந்தை வளர்க்க முடியாதவர்கள் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்து விடலாம் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் குழந்தை இல்லாத பலர் குழந்தை திருட்டில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதுபோன்று குழந்தைக்காக ஏங்கும் நிலையில் பிறந்து சிலமணி நேரமே ஆன ஒரு குழந்தையை எவ்வாறு குப்பைத் தொட்டியில் இருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

கடலூர் பகுதியில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை குறித்து அவர்களிடம் கேட்டபோது, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை நாங்கள் செய்து வருகிறோம். மேலும் பச்சிளம் குழந்தை எரித்து கொல்லப்பட்டதா? அல்லது உயிர் இழந்த காரணத்தால் குப்பையில் போட்டு எரிக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றோம் என்று கூறியிருக்கின்றனர். மேலும் விசாரணையின் முடிவில் மொத்த தகவல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. குழந்தை பாக்கியம் பெற பலர் கோவில் கோவிலாக சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடலூர் அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Exit mobile version