குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்!! அமைச்சர் அதிரடி பேட்டி!!

0
165

குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்!! அமைச்சர் அதிரடி பேட்டி!!

தமிழ்நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட 9.23 லட்சம் குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நியூமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன்பின் மருத்துவமனையில் ஆய்வு செய்த அவர், குழந்தைகளின் உடல் நிலையை கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை, அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் சந்தித்தார். அப்போது அவர் இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட 12 லட்சம் குழந்தைகளுக்கு நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் போன்ற பல நோய்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றது.

இதன் காரணமாக தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், இந்தியாவின் பல மாநில இதற்கான தடுப்பூசி போடப்படுகிறது.இதனை தொடர்ந்து தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 9.25 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட இருக்கின்றது. இந்த தடுப்பூசி இரண்டு ஆண்டுக்கு முன்பே போட்டி இருக்க வேண்டும்.

ஆனால் எதற்காக கடந்த அதிமுக அரசு இதனை செய்யவில்லை என்பது தெரியவில்லை என கூறினார். அத்துடன் 70 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கின்றது. முதல் தவணை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும். தனியார் மருத்துவமனையில் 3 தடுப்பூசி போடுவதற்கு 12 ஆயிரம் செலவாகும்.

அரசு மருத்துவமனையில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், மக்களை தேடி வரும் மருத்துவ திட்டத்தையும் முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார். அதற்கான அடிப்படை கட்டமைப்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.