Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெற்ற குழந்தையை கொல்ல , கூகுளின் உதவியை நாடிய தாய்!

Baby murdered by mother in Madhya Pradesh

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மூன்று மாதமே ஆன பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் மாவட்டத்தில் இருந்து 75 கி.மீ., தொலைவில் உள்ளது கச்ரோத் நகர்.

இங்கு வசித்து வரும் சுவாதி என்ற பெண், கடந்த 12ம் தேதி அன்று தனது மூன்று மாத குழந்தையை காணவில்லை என்று வீட்டில் கூறியுள்ளார். குடும்பத்தினரும் குழந்தையை எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த காவலர்கள், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வீடு முழுவதுமாக சோதனை செய்தனர்.

சோதனையின் போது, வீட்டின் மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை இறந்த நிலையில் மிதந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்

 

பின்னர், வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையின் தாய் மற்றும் தந்தையிடம் விசாரணையை தொடங்கிய நிலையில், குழந்தை இறந்து போனது தொடர்பாக குழந்தையின் தாயான ஸ்வாதி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

குழந்தை காணாமல் போன நாளன்று ஸ்வாதி மட்டுமே வீட்டில் இருந்ததை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். அதை தொடர்ந்து, அந்தப் பெண்ணிடன் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது பல திடுக்கிடும் தவகல்கள் வெளியானது. பெற்ற தாயே குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது

இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், குழந்தையைக் கொல்வதற்கு முன்பு, ஸ்வாதி தனது ஸ்மார்ட் போனில் எப்படியெல்லாம் கொலை செய்வது என கூகுளில் தேடியுள்ளார். கொலை செய்யும் பல வழிமுறைகளையும் கூகுளில் பார்த்துள்ளார். பின்னர், அந்த வழிமுறையின்படி, தனது மூன்று மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்’ என்று தெரிவித்தனர்.

இந்த விசாரணையைத் தொடர்ந்து ஸ்வாதியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மூன்று மாத குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version