என்ன குறுகுறுனு பாக்குற..! பிறந்தவுடன் மருத்துவர்களை முறைத்துப் பார்த்த டெரர் பேபி!!

Photo of author

By Jayachandiran

என்ன குறுகுறுனு பாக்குற..! பிறந்தவுடன் மருத்துவர்களை முறைத்துப் பார்த்த டெரர் பேபி!!

குழந்தைகள் பிறக்கும்போது அழது கொண்டே பிறப்பது அல்லது அமைதியாக பிறப்பதே இயல்பாக நடக்கும். இயல்புக்கு மாறாக, பிறந்தவுடன் மருத்துவர்களை முறைத்துப் பார்த்துக் கொண்டே ஒரு குழந்தை பிறந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் டயானே டிஜீசஸ் என்ற பெண்மணிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறக்கும் போது அழவும் இல்லை, சிரிக்கவும் இல்லை அமைதியும் இல்லை எந்த சத்தமும் போடாமல் மருத்துவர்களை முறைத்துக் கொண்டே பிறந்த அதிசயம் நடந்துள்ளது. இதனைப் பார்த்த டாக்டர்கள் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

குழந்தையை அழவைக்க மருத்துவர்கள் என்னென்னவோ முயற்சிகள் செய்தும் சிரிக்கவே இல்லை. மாறாக இரண்டு புருவங்களையும் உயர்த்தி முறைத்துக் கொண்டே இருந்தது. குழந்தையின் ஆரோக்கியத்தை சோதிக்க அழவைக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. பின்னர் தொப்புள் கொடியை துண்டித்தவுடன் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பி அழ ஆரம்பித்தது.

குழந்தை பிறக்கும் போது அதை புகைப்படம் எடுப்பதற்காகவே முறையான புகைப்பட கலைஞரை டயானே தயார் செய்திருந்தார். இதனையடுத்து அந்த குழந்தையின் படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தவுடன் உலகம் முழுவதும் பரவியுள்ளது. தெறி பேபிகளை பார்த்த நமக்கு இந்த டெரர் பேபியின் முறைப்பு புதுமையாகவே இருக்கிறது.

Exit mobile version