வாய் துர்நாற்றமா! வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து சரி செய்யும் வழிமுறைகள் !!

0
199
Shot of a handsome young man smelling his breath during his morning grooming routine

வாய் துர்நாற்றமா! வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து சரி செய்யும் வழிமுறைகள் !!

தற்போது உள்ள உடல் நலப்பிரச்சனைகளில் ஒன்று வாய் துர்நாற்றம். வாய் துர்நாற்றத்திற்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று கூறினாலும் பல் துலக்கிய பின்பும் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எவ்வாறு சரி செய்வது என்று பார்ப்போம்.

வயிற்றில் புண் இருப்பது பொதுவாக வாய் துர்நாற்றம் ஏற்பட காரணமாக சொல்லப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் வயிற்றில் உள்ள அமிலம் உணவு குழாய்க்கு செல்வதால் நெஞ்சு எரிச்சல் ஏற்ப்பட்டு வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. உணவு பழக்கம் தவிர மது மற்றும் ஆல்கஹால் பயன்படுத்துவதால் மக்கள் தொகையில் பாதி பேருக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.மேலும் 10 சதவீதம் நீரிழிவு,சிறுநீரக, மற்றும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சனை வருகிறது.

தடுக்கும் வழிமுறைகள்;

  • தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும். உணவு துணுக்குகளை அப்படியே வைத்து தூங்கினால் குப்பை தொட்டியில் எப்படி நாற்றம் ஏற்படுமோ அதேபோல் நம் வாயிலும் நாற்றம் ஏற்பட தொடங்குகிறது. ஆகவே இரவு தூங்கும் முன்பு பல் துலக்க வேண்டும்.
  • தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் இவற்றில் 2 சிறிய கரண்டி அளவு எடுத்து கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.
  • பல் துலக்க நீண்ட நாட்களுக்கு ஒரே பிரஷை பயன்படுத்த கூடாது. அதில் உள்ள கிருமிகள் துர்நாற்றம் ஏற்பட வழிவகுக்கும். எனவே 3 மாதத்திற்கு ஒருமுறை பிரஷ் மாற்ற வேண்டும்.
  • பல்லை மட்டும் சுத்தம் செய்யாமல் நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.
  • அரை டம்ளர் வெந்நீரில் சிறிது கல் உப்பு சேர்த்து கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும்.
  • தினமும் 2 அல்லது 3 துளசி இலைகளை மென்று வருவதன் மூலமும் தவிர்க்கலாம்.
  • உடலின் தண்ணிர் சத்து குறைபட்டாலும் நாற்றம் ஏற்படும். எனவே போதிய அளவு தண்ணீர் அருந்துவதன் மூலமும் தவிர்க்கலாம்.