Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீராத கடன் பிரச்சனையா? அப்போ காமாட்சி விளக்கை இப்படி ஏற்றி வையுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

#image_title

தீராத கடன் பிரச்சனையா? அப்போ காமாட்சி விளக்கை இப்படி ஏற்றி வையுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

உங்களில் பலருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று இந்த கடன் பிரச்சனை.ஒரு முறை கடன் வாங்கி விட்டோம் என்றால் அதை அடைப்பதற்குள் உயிர் போய் வருவது போல் இருக்கும்.யாரும் வேண்டுமென்றே கடன் வாங்குவது இல்லை.சூழ்நிலை அவர்களை அந்த நிலைக்கு தள்ளி விடுகிறது.திடீர் உடல்நலக் குறைப்பாடு,கல்யாணம் என்று அனைத்திற்கும் கடன் வாங்கினால் தான் சரி செய்ய முடியும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் பதிந்து விட்டது.

கடன் வாங்கிய யாரும் நிம்மதியாக தூங்குவது இல்லை என்பது தான் நிதர்சனம்.கடன் வாங்க முக்கிய காரணம் குறைவான சம்பளம்,வருமானத்திற்கு மீறிய ஆசை,அவசர செலவு ஆகியவை தான்.இது ஒரு ரகம் என்றால் மற்றொரு ரகம் பணத்தை எப்படி சேமித்தாலும் கையில் தாங்காமல் போதல்.இதற்கு என்ன தான் தீர்வு என்று ஒரு முறையவது நீங்கள் புலம்பி இருப்பீர்கள்.

இதற்கு ஆன்மீக முறையில் பல வழிகள் இருக்கிறது.அதில் ஒன்று தான் காமாட்சி விளக்கு ஏற்றி வைத்தல் முறை.வீட்டில் காமாட்சி அம்மன் படங்கள்,விளக்கு ஆகியவை இருந்தால் நமக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும்.விரைவில் கடன் பிரச்சனை நீங்கி செல்வம் பெருக தொடங்கும்.

காமாட்சி விளக்கு வைக்கும் முறை:-

அதிகாலை 3 மணிக்கு எழுந்து வீட்டை நன்கு துடைக்க வேண்டும்.செவ்வாய்,வெள்ளியை தவிர்த்து மற்ற நாட்களில் இந்த முறையை பின்பற்றலாம்.வீட்டை துடைத்த பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும்.

பிறகு பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும்.இதனை அதிகாலை 4 மணிக்குள் செய்து விட வேண்டும்.

அதையடுத்து பூஜை அறையில் காமாட்சி விளக்கு வைக்கும் இடத்தில் அரிசி மாவில் கோலமிட்டு அதன் மேல் இரு பித்தளை தட்டை வைக்க வேண்டும்.

பின்னர் அந்த தட்டில் பச்சரிசி ஒரு கைப்பிடி அளவு சேர்க்க வேண்டும்.அதையடுத்து காமாட்சி விளக்கை வைத்து அதில் சுத்தமான நெய் ஊற்ற வேண்டும்.

இந்த விளக்கில் தாமரைத்தண்டு திரியை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். முன்னதாக விளக்கின் மேல் பூ வைக்க வேண்டும். அதன் பின் விளக்கு ஏற்றி அவரவர் குலதெய்வத்தை முதலில் வணங்கி விட்டு அடுத்து காமாட்சி அம்மனை வழிபட வேண்டும். காமாட்சி அம்மன் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து நம் வாழ்க்கையை மேம்படுத்தும் சக்தி கொண்டவர். அவரை மனதில் நினைத்து கடன் பிரச்சனை சரியாக வேண்டுமென்று வழிபட வேண்டும். பின்னர் பூஜை அறையில் கற்பூரம், ஊதுபத்தி கொண்டு ஏற்றி வழிபட வேண்டும்.இதனால் வாழ்வில் கடன் பிரச்சனை,பணக்கஷ்டம் நீங்கி வாழ்க்கை நன்றாக நகரும்.அதோடு கடனை விரைவில் அடைக்க நாமும் முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Exit mobile version