Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காவல் அதிகாரி எடுத்த விபரீத முடிவு !! எனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என இறுதி கடிதம் !!

தூத்துக்குடி மாவட்டம்,பிள்ளையார் பெரியவன்வன்தட்டு பகுதியை சேர்ந்த செல்வமுருகன் என்பவர், திருச்செந்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்துள்ளார. இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல செல்வமுருகன் என்பவர் பணி முடித்துவிட்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பியுள்ளர்.அருகிலிருந்த கடைவீதிக்கு செல்வதாக கூறி வீட்டிற்கு வெளியே சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை .இதனால் பதட்டமடைந்த குடும்பத்தினர் அருகில் தேடியுள்ளனர்.

திடீரென அருகில் உள்ள காட்டுப் பகுதியில் விஷமருந்தி வாயில் நுரையுடன் இறந்து கிடந்த நிலையில், அவரை மீட்கப்பட்டனர்.

மேலும் இதுதொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் செல்வமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்துள்ள கடிதமும் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.

Exit mobile version