உடம்புக்கு குளிர்ச்சி கொடுக்கும் பாதாம் பிசின் ஜூஸ்.. வெறும் 2 நிமிடம் போதும்..!

0
304
#image_title

Badam Pisin juice in tamil: கோடைக்கால வெயில் அனைவரையும் வாட்டி வரும் நிலையில் குளிர்ச்சியாக ஜூஸ் தாயர் செய்து குடித்து வருகின்றனர். அந்த வகையில் பழங்களில் பானக்கங்கள் செய்து குடித்தும் வருகின்றனர். அந்த வகையில் மிகவும் எளிமையான முறையில் பாதம் பிசினில் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • பாதாம் பிசின் – 2 அல்லது 3
  • சப்ஜா விதைகள் – 2 ஸ்பூன்
  • சக்கரை – தேவையான அளவு
  • எலுமிச்சை பழம் – 1

செய்முறை

முதலில் இரண்டு மூன்று பாதம் பிசினை எடுத்து முதல் நாள் இரவு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் அது அந்த பாத்திரம் முழுவதும் நிறம்பி இருக்கும்.

பிறகு இரண்டு ஸ்பூன் சப்ஜா விதைகளை எடுத்து நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கிளாஸில் எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ள வேண்டும்.

சப்ஜா ஊறியதும், இரண்டு மூன்று ஸ்பூன் அளவு கிளாஸில் போட்டுக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு தேவையான அளவு பாதாம் பிசினை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சுவைக்கு ஏற்ப சிறிதளவு உப்பு தேவையான அளவு சர்க்கரை அல்லது தேன் கலந்து பரிமாறலாம்.

தேவைப்பட்டால் நன்னாரி சர்பத் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது அதை தவிர்த்து விடலாம்.

மேலும் படிக்க: நம்புங்க..! வெறும் 2 பொருட்களை வைத்து சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்யலாம்..!