Tiruchendur:திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரும் உயிரிழந்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று ஆகும். இக்கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை காண வருகிறார்கள். மேலும் இங்குள்ள கோவில் யானை முருக பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வந்துள்ளது. இந்த கோவில் 2006 ஆம் ஆண்டு பெண் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த யானைக்கு தெய்வானை என பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த யானைக்கு 26 வயதாகிறது. வளர்ச்சி அடைந்த யானை ஆகும். இந்த நிலையில் இன்று மாலை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரும் சேர்ந்து யானைக்கு உணவாக வாழைப்பழம் கொடுத்து வந்து இருக்கிறார்கள்.
அப்போது திடீரென மிரண்டு பிளிறிய யானை அருகில் இருந்த பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரையும் தனது துதிக்கையால் இழுத்து கீழே தள்ளி காலால் மிதித்து உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே பாகன் உதயகுமார் உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த சிசுபாலன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்தார்கள் இச்சம்பவம் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மிருகம் எப்போதும் மிருகம் தான் என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக உள்ளது.