அன்புமணி ராமதாஸ்க்கு பிடிவாரண்ட்! கொந்தளிக்கும் தொண்டர்கள்!

0
110
Bail for Anbumani Ramadas! Turbulent volunteers!

அன்புமணி ராமதாஸ்க்கு பிடிவாரண்ட்! கொந்தளிக்கும் தொண்டர்கள்!

சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதல் 6-ம் நடந்து முடிந்தது.அதிமுக வுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது.தேர்தல் முடிவுகள் வெளி வரும் முன்னரே,பாமக இளைஞரணி தலைவர் சிறைக்குள் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.கடந்த 2013 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை பவுர்ணமி விழா நடைப்பெற்றது.சித்திரை விழாவின்போது மரக்காணத்தில் கலவரம் ஏற்பட்டது.

அங்கு வன்முறை ஏற்பட்டதால்,பொது அமைதி சீற்குலைந்ததாகவும் மற்றும் வன்முறையை தூண்டியதாகவும் பாமக தலைவர் ராமதாஸ்,பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி,மாநிலத்தலைவர் ஜி.கே மணி,முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே மூர்த்தி,அரசகுமார்,நாகராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவி செய்தனர்.இவ்வழக்கானது செங்கல்பட்டு,முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஓராண்டுக்கு முன் மாற்றப்பட்து.

இந்த வாழக்கனது நேற்று விசாரணைக்கு வந்துள்ளது.அப்போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.ராமதாஸ்க்கு 89  வயது ஆகிறது என்பதாலும்,தற்போது அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருவதாலும் அவரால் வர முடியவில்லை என்று மருத்துவ சான்றிதழ் கொடுத்தார்.இந்த வழக்கில் முன்னால் எம்.எல்.ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் ஆஜரானார்.மற்ற ஆறு பேருக்கும் மனு அளித்தனர்.

நீதிபதி,ராமதாஸ் மனுவை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்ற 6 மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.அதன்பின் 6 பேரான அன்புமணி, ஜி.கே மணி, ஏ.கே மூர்த்தி,அரசகுமார்,நாகராஜ் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.வரும் 19-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவும் ஊத்ரவிட்டுள்ளர்.அனுபுமணிக்கு பிடிவாரண்ட் பிரபித்துள்ளதால் தொண்டர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.