Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகும் ‘பாக்கியலட்சுமி’ஷீரோ எழில்.!!

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் விஷால் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் தான் விஷால். இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். சமூக வலைதளங்களில் இவரை நிறைய பேர் பின் தொடர்கின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியலில் விஷால் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் எழில். அதனால் இவரை பலரும் எழில் என்றே அழைக்கின்றனர். அந்த அளவுக்கு இவருடைய நடிப்பு சீரியலில் இயல்பாக இருக்கும்.

இந்நிலையில் விஜய் டிவியில் புதியதாக ஒளிபரப்பாக உள்ள ‘காதல் கொண்டாட்டம்’ என்ற புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். மேலும், இவருடன் ஜாக்லினும் தொகுத்து வழங்குகிறார். தற்போது இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Exit mobile version