கோபியை நேருக்கு நேராக கேள்வி கேட்ட தந்தை!! பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்!!

0
201

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்களை அடிமைப்படுத்தி ஒவ்வொரு எபிசோடும் மிஸ் பண்ணாமல் பார்க்கச் செய்யும் அளவுக்கு இருக்கும்.

இதில் அனைத்து தொலைக்காட்சி சேனல்களுக்கும் முன்னோடி சன்டிவி தான். ஒரு காலத்தில் சீரியல் என்றால் சன் டிவி, சன்டிவி என்றாலே சீரியல் என்ற நிலையில் இருந்தது.

தற்போது வரை சன்டிவி அப்படித்தான் இருக்கிறது. ஆனால் சுவாரசியமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான். சன் டிவியை விட்டால் இல்லத்தரசிகளுக்கு சீரியல் பார்க்க வேறு வழியே இல்லை என்ற நிலைதான் இருந்தது. இத்தகைய நிலையில் சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி சீரியல்களை ஒளிபரப்பி களமிறங்கியது.

பழைய பஞ்சாங்கத்தை யே பாடிவந்த சன்டிவி சீரியல்கள் அனைவருக்கும் போரடிக்க துவங்கிய நிலையில், விஜய் டிவி சற்று அப்டேட்டான மனநிலையில் சீரியல்களை ஒளிபரப்ப துவங்கியது. இருப்பினும் விஜய் டிவியும் மூடநம்பிக்கைகள் மற்றும் பிற்போக்குத் தனங்கள் நிறைந்த சீரியல்களை தான் ஒளிபரப்புகிறது என்றாலும் சன் டிவி சீரியல்களுடன் ஒப்பிடும் பொழுது விஜய் டிவி சீரியல்கள் மோசமில்லை.

அப்படி இல்லத்தரசிகளின் ஆஸ்தான சீரியலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படுவதுதான் பாக்கியலட்சுமி தொடர். இதில் சுஜித்ரா பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு கணவனான கோபி கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்து வருகிறார். சதீஷ் ராதிகா என்ற தனது முன்னாள் காதலியுடன் வீட்டிற்கு தெரியாமல் பழகி வருகின்ற நிலையில் தற்போது அதனை அவரது தந்தை பார்த்துவிட்டார்.

இதனால் வீட்டிற்கு தாமதமாக வரும் கோபியை அவருடைய தந்தை அழைத்து கேள்வி கேட்கிறார். அப்பொழுது எனக்கு ஆபீஸ் சென்று கோபி பொய்களை அள்ளி வீசுகிறார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த தந்தை உடனே நேற்று நீ வந்த கோவிலுக்கு நானும் வந்தேன் என்று உண்மையை உடைக்கிறார். மேலும் மேலும் பொய்களை அள்ளி வீசாதே என்று கோபியை கடுமையாக சாடுகிறார். இன்று இந்த நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக செல்லும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கான ப்ரோமோ வெளியிட்டு பொய் புழுகினி என்று கோபியை கிண்டல் செய்துள்ளனர்.