உன் மேல லவ் எல்லாம் இல்ல என்று சொன்ன பாலா! Why this kolaveri Da என்று பாடிய சிவானி!

0
160

பிக் பாஸ் சீசன் 4, 16 போட்டியாளர்கள் உடன் தொடங்கியது. ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, ஆகியோர் வெளியேறி உள்ளார்கள்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் ஹவுஸ் மேட் அனைவரையும் பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்கில் அனைவரும் டாஸ்கை புரிந்து கொள்ளாமல் தவறாக விளையாடியதிற்கு பேசி முடித்து மற்றும் மற்ற ஹவுஸ்மேடுகளின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தார்.

நேற்று நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கிய நிலையில் அனைவரும் இரண்டு பேரை காரணத்துடன் நாமினேட் செய்தார்கள்.

அதில் சம்யுக்தா அனிதாவை சிடுமூஞ்சி மேக்ஸ் என்றும், ஆரி பாலாவை காதல் கண்ணை மறைக்கிறது என்றும், மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சுசியை மாற்றி பேசுகிறார் என நாமினேட் செய்தார்கள். அதில் ஆரி, சோம், அனிதா, சுசித்ரா, பாலா, ரியோ ஆகியோர் நாமினேஷனில் இடம் பெற்றார்கள். ஆஜீத் இந்த வார கேப்டன் என்பதால் தப்பித்து விட்டார்.

அவர்கள் நாமினேஷன் ப்ராஸசில் சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் பிக்பாஸ் அனைவரிடமும் வெளியே சொல்லிவிட்டார். அதில் காதல் கண்ணை மறைக்கிறதே என்று சொன்னவுடன் அனைவரும் சிரித்து விட்டனர். இதனால், கடுப்பான பாலா எவண்டா அது அப்படி சொன்னது, கிறுக்கு பசங்களா என பேச, அதற்கு ரியோ பயங்கரமாக கோபப்பட்டு எழுந்து சென்றார்.

உடனே பாலா சிவானியிடம் “எனக்கு லவ் எல்லாம் இல்ல சரியா”! லவ் வந்தா நானே சொல்றேன்! வராது! வந்தா சொல்றேன் சரியா? என்று சொல்லிவிட்டார். உடனே ஷிவானியின் முகம் மாறிவிட்டது.

அதன் பிறகு பாலா சுசித்ரா உடன் சேர்ந்து ஒரு ராப் பாடல் ஒன்றை தயார் செய்து பாடிக்கொண்டிருந்தனர். இதை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சிவானி உடனே நீங்கள் என்னைக் கண்டுகொள்ளவில்லை! நான் எழுந்து சென்று விட்டேன் இருந்தாலும் என்னை நீங்கள் கண்டு கொள்ளவில்லை! என்று சொன்னார். அதற்கு பாலா ஓகே இனிமேல் நீயும் என்ன கண்டுக்காத என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

அதன்பின் ஷிவானி, ரம்யா, சம்யுக்தா மூன்று பேரும் வெளியே கார்டன் ஏரியாவில் ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டா என்று பாட்டை பாட ஆரம்பித்தனர். உடனே சம்யுக்தா சிவானியை பார்த்து welcome to the single Gang என்று கூற அதற்கு ஷிவானி ஏதோ சொல்கிறார்.

பாலாஜியின் இந்த செயல் சிவானியை கடுப்பாக்கியுள்ளது என்றே கூறலாம்.