பலத்த பாதுகாப்பில் மதுரை மீனாட்சியம்மன் கோயில்!

0
150
பலத்த பாதுகாப்பில் மதுரை மீனாட்சியம்மன் கோயில்!

பலத்த பாதுகாப்பில் மதுரை மீனாட்சியம்மன் கோயில்!

அயோத்தியில் பாபர் மசூதி பதினாறாம் நூற்றாண்டில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டது. இந்நிலையில் ராமர் பிறந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தனர் கடந்த 1949ஆம் ஆண்டு மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மாவட்ட நிர்வாகம் மசூதியை மூடி முத்திரையிட்டனர்.

பின்னர் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பை விசாரிக்க லிபரான் ஆணையத்தை 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அமைத்தார் 1993 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்த சிபிஐ பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றம் அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், மேலும் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கான அமைப்பை மூன்று மாதத்திற்குள் மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று, பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலீஸார் 4 வாசல்களிலும் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் போலீஸார், பக்தர்களை தீவிர சோதனைக்குப் பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கிறார்கள்.