Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பல்டி அடித்த இபிஎஸ் : திமுகவிற்கு ஊது குழலாக செயல்படுகிறார்- ஓபிஎஸ் கண்டனம்!

#image_title

பல்டி அடித்த இபிஎஸ் : திமுகவிற்கு ஊது குழலாக செயல்படுகிறார்- ஓபிஎஸ் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஊது குழலாக செயல்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சட்டசபையில் மூன்றாவது நாளான நேற்று ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை ஆதரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டினை எடுத்து திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார் இபிஎஸ். 2022 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை அதிமுக ஆதரிக்கிறது என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி. இந்தக் கொள்கையில் இருந்து தற்போது அந்த பல்ட்டி அடித்திருக்கிறார். இதிலிருந்து என் எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கைகோர்த்து விட்டார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எம்ஜிஆர் எந்த திமுக என்கிற தீய சக்தியை எதிர்த்து கட்சியை தொடங்கினாரோ, ஜெயலலிதா எந்த திமுக கட்சியை எதிர்த்து கட்சியை வளர்த்தாரோ அதையெல்லாம் மறந்து திமுகவுடன் கைகோர்த்து இருப்பது மற்றும் ரகசிய உடன்பாடு செய்திருப்பது என்பது கட்சியின் தனித்தன்மையை அழித்து அதிமுகவை வீழ்ச்சியை நோக்கி கொண்டு சென்று இருப்பதற்கான அடையாளமாகும். இப்படியே ஆனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான்காவது இடத்திற்கு மக்களால் துரத்தி அடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

Exit mobile version