உடல் ஆரோக்கியத்திற்கு மூங்கில் குருத்து தான் பெஸ்ட்!! இதை இப்படி எடுத்துக் கொள்ளுங்கள்!!

0
74
Bamboo root is the best for health!! Take it this way!!

நம் முன்னோர்கள் காலத்தில் மூங்கில் குருத்து உணவாக எடுத்துக் கொள்ளப்பட்டது.இந்த மூங்கில் குருத்தில் வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.நார்ச்சத்து நிறைந்து காணப்படும் மூங்கில் குருத்தை உணவாக எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை போன்றவை குணமாகும்.மூங்கில் குருத்து இரத்த இயக்கத்திற்கு உதவுகிறது.பல அற்புத நன்மைகளை கொண்டிருக்கும் மூங்கில் குருத்தை கீழ்கண்டவாறு பயன்படுத்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரித்து ஆரோக்கியமாக இருக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:

*மூங்கில் குருத்து
*வெங்காயம்
*சீரகம்
*வரமல்லி தூள்
*எண்ணெய்
*உப்பு
*மஞ்சள் தூள்
*வர மிளகாய்
*கடுகு

செய்முறை விளக்கம்:

1)முதலில் ஒரு மூங்கில் குருத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

2)அடுத்து ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்துவிட்டு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

3)பிறகு அடுப்பில் வாணலி வைத்து சமையல் எண்ணெய் ஊற்ற வேண்டும்.எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து பொரியவிட வேண்டும்.

4)பிறகு நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.

5)பிறகு நறுக்கி வைத்துள்ள மூங்கில் குருத்தை அதில் கொட்டி கிளறிவிட வேண்டும்.

6)இதை தொடர்ந்து மஞ்சள் தூள்,வரமல்லித் தூள் மற்றும் வர மிளகாய் தேவையான அளவு சேர்த்து வதக்கிவிட வேண்டும்.

7)பின்னர் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி மூங்கில் குருத்தை வேக வைக்க வேண்டும்.தண்ணீர் சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மூங்கில் குருத்தை சாப்பிடலாம்.உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுப் பொருளாக மூங்கில் குருத்து உள்ளது.