Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுற்றுலா பயணிகளுக்கு நாளை தடை!! நீர்வளத்துறை அதிகாரிகளின் அதிரடி அறிவிப்பு!!

Ban for tourists tomorrow!! Action announcement of water resources department officials!!

Ban for tourists tomorrow!! Action announcement of water resources department officials!!Ban for tourists tomorrow!! Action announcement of water resources department officials!!

சுற்றுலா பயணிகளுக்கு நாளை தடை!! நீர்வளத்துறை அதிகாரிகளின் அதிரடி அறிவிப்பு!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையையோட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உள்ளது. மேலும் அடி 18 அன்று பொதுமக்கள் நீர்தேக்க பகுதியை பார்வையிட ஆண்டு தோறும் வருவது வழக்கம். சேலம் ,தருமபுரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர்    மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 3  ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க படுவதாக அந்தந்த  மாவட்ட ஆட்சியகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடுமுறை ஆகஸ்ட் 3 ம் தேதி சுகந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் என்பதால் அவரை போற்றும் விதமாக அரசால் கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறையால் அதிக அளவில் அணையை பார்வையிட வருவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு அணையின் பாதுகாப்பை கருதி ஆடி 18 ஆம் தேதி பவானிசாகர் அணையின் மேற்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது. ஆனால் நாளை வழக்கம் போல் பவானிசாகர் பூங்கா திறந்து இருக்கும்.

அதனை  தொடர்ந்து பவானிசாகர் அணையில் நீர்மட்டம் தற்போது 84 அடியாக உள்ளது. மேலும் அணையின் மேற்பகுதிகளில் அதிக அளவு தேன் கூடுகள் இருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பை நலனை கருத்தில்கொண்டு தடை விதிக்கப்ட்டுள்ளதகவும் அறிவித்துள்ளார்கள். மேலும் மேற்பகுதியில் காட்டு யானை ஒன்று வந்து திறப்பி சென்றுள்ளதால் இந்த தடை என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

Exit mobile version