மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் : திருநங்கைகள் கோரிக்கை!!

0
114
#image_title

மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் : திருநங்கைகள் கோரிக்கை!!

மார்க் ஆண்டனி திரைப்படத்தை தடை செய்ய கோரி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அழைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் மார்க் ஆண்டனி படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரமாண்டமான வரவேற்பும் கிடைத்துள்ளது. நடிகர் விஷால் அவர்களுக்கு கம்-பேக் படமாக மார்க் ஆண்டனி படம் அமைந்துள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்கியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா அவர்களின் அசத்தலான நடிப்பு படத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. நீதிமன்ற வரை சென்று அதனைத் தாண்டி இப்படம் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் படம் வெளியாகி அனைத்திலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த படத்திற்கு புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. படத்தில் திருநங்கைகள் குறித்து தவறாக சித்தரித்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இப்படத்தை தடை செய்ய வேண்டும் அல்லது படத்தில் உள்ள அந்தக் குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருநங்கைகள் மத்தியில் எழுந்துள்ளது.

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் திருநங்கைகள் மற்றும் எல்.ஜி.பி.டி (தன்பாலின ஈர்பாலர்கள்) சமூகங்களை அவமதிக்கும் விதமாக சில காட்சிகளை உள்ளன. அதில் சில காட்சிகள் திருநங்கைகளை அவமானப்படுத்துவதுமாக இருக்கிறது. இதுபோன்ற திரைப்படங்களை எங்களை பத்து ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்படுவது திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் அல்லது அந்த குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் மற்றும் அந்த இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக புகார் மனு ஒன்றை, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கைகளும்; சமூக ஆர்வலர்களும் வழங்கி உள்ளனர்.