Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் மருந்துக்களுக்கான  தடை ரத்து!  ஆயுர்வேத கட்டுப்பாட்டு இயக்குநரகம்  வெளியிட்ட தகவல்! 

Ban on blood pressure and diabetes medicines! Information released by Directorate of Ayurvedic Control!

Ban on blood pressure and diabetes medicines! Information released by Directorate of Ayurvedic Control!

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் மருந்துக்களுக்கான  தடை ரத்து!  ஆயுர்வேத கட்டுப்பாட்டு இயக்குநரகம்  வெளியிட்ட தகவல்!

பிரபல யோகா பாபா ராம்தேவ் பதஞ்சலி என்ற நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.இந்த நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் இந்த நிறுவனத்தின் பொருட்களை தான் பயன்படுத்தினர்.இந்த நிறுவனம் மருந்து பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்களும் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரகண்ட் ஆயுர்வேத மற்றும் யுனானி கட்டுப்பாட்டு இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் பதஞ்சலி நிறுவனத்திற்கு கீழ் இயங்கி வரும் திவ்யா பார்மசியின் மதுக்ரிட் ,ஐக்ரிட், தைரோகிரிட், பிபிகிரிட் மற்றும் லிப்பிடோம் ஆகிய ஐந்து மருந்துகளும் ரத்த அழுத்தம் ,நீரழிவு ,தைராய்டு ,குளுக்கோமா எனும் கண் நோய் அதிக கொலஸ்ட்ரால் ஆகிய நோய்களுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்தாகும்.

மேலும் இந்த மருந்துகளின் தயாரிப்பை மதிப்பாய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழு அதிகாரிகள் ஒப்புதல் வரும் வரை அந்த ஐந்து மருந்துக்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்த ஆணையம் அதில் ஏதே தவறு இருகின்றதாக அவசர நிலையில் தடை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறி அதனை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.மேலும் இது குறித்து சமந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version