Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் விமானங்கள் ரத்து! பயணிகள் கடும் அவதி!

Ban on flights from Chennai to this place! Passengers suffer!

Ban on flights from Chennai to this place! Passengers suffer!

சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் விமானங்கள் ரத்து! பயணிகள் கடும் அவதி!

சென்னை விமான போக்குவரத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அதனால் சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 7 விமானங்களும் ,அந்தமானில் இருந்து சென்னைக்கு வரும் 7 விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னதாகவே கடந்த நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து 4 ஆம் தேதி வரை,15 ஆம் தேதியில் இருந்து 18 ஆம் தேதி வரை மீண்டும் 29 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 2 ஆம் தேதி வரை மூன்று முறை மொத்தம் 12 நாட்கள் அந்தமான் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது நான்காவது முறையாக நேற்று முதல் வரும் 16 ஆம் தேதி வரை மொத்தம் நான்கு நாட்களுக்கு மீண்டும்தவிமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதை பராமரிப்பு பணிகள் நடப்பதினால் தான் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.மீண்டும் விமான சேவைகள் வரும் 17 ஆம் தேதி வழக்கம் போல் தொடங்கும் என தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதத்தில் இருந்து தற்போது வரை 16 நாட்கள் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இந்த விமான சேவை ரத்து குறித்து முன்னதாகவே முறையாக பயணிகளுக்கு அறிவிப்பு வழங்கப்படாமல் திடீரென இவ்வாறு ரத்து செய்யப்படுவதினால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Exit mobile version