Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை! புதிய சட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை! புதிய சட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் தினசரி பல தற்கொலைகள் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டம் மூலம் புதிய சட்டம் இயற்றப்பட்டு முற்றிலுமாக ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார் உள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது இளைஞர்கள் பலரும் அதிக அளவு பணம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து அதன் கடனை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இது குறித்து தமிழகத்தில் ஆன்லைன் தடை மசோதா சட்டம் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அச்சட்டம் காலாவதியான நிலையிலும் ஆளுநர் தற்போது வரை கண்டுகொள்ளாததால் அனைத்து கட்சியினரும் ஆளுநருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஆன்லைன் விளையாட்டு மற்றும் அதன் பாதிப்பு குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதில் 65 சதவீதம் பேர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

அதில், நான் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதில் அந்தந்த மாநிலத்தில் ஏற்படும் தற்கொலை பாதிப்புகள் குறித்து கேட்டு அறிந்தேன்.

இளைஞர்கள் பணம் ஈட்டும் பொருட்டு இவ்வாறு ஆன்லைன் சூதாட்டத்தை நம்பி பணத்தை இழப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து ஏன் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள்.

இது சமூகத்தில் உள்ள மக்களை பாதிப்படைய செய்வதால் இது குறித்து மேலும் அனைவரிடமும் ஆலோசனை செய்ய உள்ளோம்.

அதனால் கூடிய விரைவில் இதன் பாதிப்புகளை மையமாக வைத்து நாடாளுமன்றத்தின் மூலம் புதிய சட்டம் இயற்றப்பட்டு ஆன்லைன் சூதாட்டமானது ரத்து செய்யப்படும். இந்தியாவின் டிஜிட்டல் மசோதாவானது உலக நாடுகளுக்கு முன் முன் மாதிரியாக இருக்கும் என தெரிவித்தார்.

Exit mobile version