சாலையோரம் விற்கும் உணவுகளுக்கு தடை! அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு!
கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில். தற்போது அதே போன்று பல்வேறு நோய் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. கொரோனா போன்ற புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இதனையடுத்து காலரா, குரங்கம்மை போன்ற நோய்களும் அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் சிலருக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நேபாளத்தில் உள்ள காத்மாண்டு என்ற பகுதியில் 12 பேருக்கு காலரா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இந்த தொற்றானது சுகாதாரமற்ற நீரில் உருவாகும் ஒரு வகை பாக்டீரியா தீநுண்மியால் உருவாவது தான் இந்த காலார நோய். இந்த நோய் தொற்று ஏற்பட்டால் கடும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
இதன் மூலம் உடம்பில் உள்ள நீர்ச்சத்து அனைத்தும் போகச் செய்யும். இந்த காலரா தொற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டால் ஆரோக்கியமற்றவர்கள் மரணமடைய கூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நோய் தொற்றை தடுப்பதற்காக கடந்த வாரம் நேபாளத்தில் உள்ள காத்மண்டு பெருநகர பகுதியில் உள்ள பானி பூரி விற்பனைக்கு, நகர நிர்வாகம் தடைவிதித்தது. இதனையடுத்து பெருநகராட்சி நிர்வாகம் சாலையோர உணவுகளை விற்பதற்கும் தடை விதித்துள்ளது. மேலும் குடிநீர் குழாய்கள் ,வடிகால், சுகாதாரமற்ற நீர் தேங்கும் இடம் போன்றவற்றை உன்னிப்பாக கவனிக்கா வேன்டும் என்றும் சுகாதார துறைக்கு உத்தரவுயிடப்பட்டுள்ளது.