Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஆறு மாவட்டத்தில் பேருந்துகள் இயக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Ban on running buses in this river district! Action order issued by the government!

Ban on running buses in this river district! Action order issued by the government!

இந்த ஆறு மாவட்டத்தில் பேருந்துகள் இயக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து நேற்று புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்று முன்தினமே நள்ளிரவு சுமார் 3 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டு வருகின்றது.அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அனைத்து அரசு அதிகாரிகளும் தலைமையகத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் ,கடலூர்,விழுப்புரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு புயல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர் அதனால் இரவு நேரத்தில் பேருந்துக்குள் இயக்கவோ,பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டமாக நிற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version