இந்த தங்க நகை விற்பனைக்கு தடை!! மத்திய அரசின் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 1-ம் தேதி முதல், நான்கு இலக்க எண் கொண்ட ஹால்மார்க் தங்க நகைகளின் விற்பனைக்கு தடை விதிப்பதாகவும், இனி ஆறு இலக்கம் கொண்ட தங்க நகைகளையே விற்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது நகை வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஹால்மார்க் என்பது தங்கத்தின் தூய்மையை குறிப்பதற்கு வழங்கப்படும் சான்றிதழ் ஆகும் .
இந்த ஹால்மார்க் முத்திரை என்பது கடந்த 2021 ஜூன் மாதம் முதல் கட்டமைக்கப்பட்டது. பொது மக்களும் நகைக்கடைகளில் ஹால்மார்க் நகையா என்று பார்த்து வாங்கும் அளவிற்கு விழிப்புணர்வு எற்பட்டநிலையில், வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஆறு இலக்க எண் கொண்ட ஹால்மார்க் நகைகளையே விற்பனை செய்யவேண்டும் எனவும், அவ்வாறு தவறும் பச்சத்தில் நகைகளின் மதிப்பை விட ஐந்து மடங்கு அபாரதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தங்கநகை வியாபாரிகளை எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே திருமண சுபகாரியங்கள் போன்றவைகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என பெண்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் ஆறு இலக்க எண்களை முத்திரை பதிப்பதில் பல நடைமுறை சிக்கல் இருப்பதாவும், குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது அவகாசம் வேண்டும் எனவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹால்மார்க் மையம் சென்று, விண்ணபித்து அவர்கள் தரும் நேரத்தில் நகைகளை ஒப்படைக்கவேண்டும் என்றும், இதன் பின் நகைகளை டெலிவரி தருவதற்கு ஒரு நாள் ஆகும் எனவும், பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு, தமிழ்நாடு தங்கநகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியுள்ளார்.