தலைமுடிக்கு பல நன்மைகளை அள்ளித் தரும் வாழைப்பழ ஹேர் மாஸ்க்!!! இதை எவ்வாறு செய்வது!!?
நம் தலை முடிக்கு பல நன்மைகளை அள்ளித் தரும் வாழைப்பழ ஹேர் மாஸ்க் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழத்தை பொதுவாக மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்வதற்கு மருந்தாக பயன்படுத்துவார்கள். இந்த திரைப்படத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் பல நன்மைகளை நமக்கு அள்ளித்தருகின்றது.
வாழைப்பழத்தில் இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பொட்டாசியம் சத்துக்கள் இருக்கின்றது. மேலும் வைட்டமின் சத்துக்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள் அதிகளவில் உள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு உதவி செய்கின்றது.
வாழைப்பழத்தை சாப்பிடுவதால் மட்டுமல்லாமல் இதில் தேநீர் தயார் செய்து குடித்து வந்தாலும் பல நோய்கள் குணமாகும். தற்பொழுது தலை முடிக்கு நன்மை அளிக்கும் வாழைப்பழ ஹேர் மாஸ்க் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழத்தை ஹேர் மாஸ்க் செய்யத் தேவையான பொருட்கள்!!!
* வாழைப்பழம்
* முட்டை
* ஆலிவ் எண்ணெய்
* தேன்
செய்முறை…
ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் பழுத்த வாழைப்பழத்தை சிறிது சிறிதாக அறுத்து அதில் சேர்த்து நன்கு அழுத்தி பிசைய வேண்டும். பின்னர் இதில் ஒரு முட்டையை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இதில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அனைத்தையும் நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். இதோ வாழைப்பழத்தை ஹேர் மாஸ்க் தயாராகி விட்டது. இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.
தயார் செய்து வைத்துள்ள இந்த ஹேர் மாஸ்க் கலவையை தலையில் எண்ணெய் பசை இல்லாத பொழுது தலைவர்களின் தேய்க்க வேண்டும். பின்னர் தலைக்கு ஒரு ஹேர் கேப் போட்டு 1 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். 1 மணி நேரத்திற்கு பிறகு லேசான ஷாம்பு கொண்டு தலையை அலசி விட வேண்டும்.
இவ்வாறு செய்வதால் தலை முடியில் உள்ள வறட்சி நீங்கி தலை முடி உதிர்தல் பிரச்சனை குணமாகும். தலைமுடி மென்மையாக மாறும். மேலும் தலை முடிக்கு வலிமை கிடைக்கும். முடியின் வேர்கால்கள் வலிமை பெறும். முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.