முகத்தில் பருக்கள்,கரும் புள்ளிகள்,சுருக்கம் இல்லாமல் இருப்பதை பலரும் விரும்புகின்றனர்.பொலிவாக சருமம் கிடைக்க வாழைப்பழத் தோலை வைத்து அதிக செலவு இல்லாத ஒரு ஹோம் மேட் க்ரீம் தாயர் செய்வது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த வாழைப்பழத் தோல் க்ரீம் நிச்சயம் உங்கள் முகத்தை அழகாகவும்,பளபளப்பாகவும் மாற்றும்.
தேவையான பொருட்கள்:
1)வாழைபழத் தோல்
2)தேன்
3)தயிர்
செய்முறை விளக்கம்:
1.முதலில் ஒரு வாழைப்பழத்தின் தோலை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை நீரில் போட்டு அலசி சுத்தம் செய்ய வேண்டும்.
2.பின்னர் மிக்ஸி ஜாரில் வாழைப்பழத் தோலை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
3.இந்த வாழைப்பழத் தோல் பேஸ்டை ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்க வேண்டும்.
4.பிறகு ஒரு தேக்கரண்டி கெட்டி தயிர் சேர்த்து க்ரீம் பதத்திற்கு கலக்கி கொள்ளவும்.
5.இந்த க்ரீமை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்னர் சுத்தமான நீரில் முகத்தை வாஷ் செய்யவும்.
6.பிறகு காட்டன் துணியில் முகத்தை துடைத்துவிட்டு செய்து வைத்துள்ள வாழைப்பழத் தோல் க்ரீமை முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.
7.இந்த க்ரீம் முகத்தில் 30 நிமிடங்கள் வரை உலர வேண்டும்.பிறகு குளிர்ந்த நீரை முகத்தை கழுவிக் கொள்ளவும்.
8.இந்த க்ரீமை காலை மாற்றும் இரவு தூங்குவதற்கு முன் முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் விரைவில் உங்கள் முகம் பொலிவாகவும் பளபளப்பாகவும் மாறுவதை உணர முடியும்.