பங்களாதேஷ்: இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே தற்போது நட்புறவு பாதிக்கப்பட்டு இரு நாட்டுக்கும் இடையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் உதவி கேட்கும் வங்கதேசம்.
வங்க தேசத்தில் வெடித்த வன்முறையின் காரணமாக வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். மேலும் தற்போது வங்கதேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஷ் தலைமையில் அந்நாட்டு அரசு செயல்பட்டு வருகிறது.
வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் மீது தாக்குதலை நடத்தியது, கோவில்களை சேதப்படுத்தியது பாகிஸ்தான் உடன் நட்பு கொள்வது மேலும் எல்லையில் ட்ரோன்களை பறக்க விடுவது போன்ற சம்பவங்கள் அந்த இடைக்கால அரசின் மத்தியில் நடைபெற்று வருகிற போதில் அதனை அந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர்.
இப்படி ஒரு புறம் பகைமையாக இருக்க மற்றொரு புறம் வங்கதேசம் நமது நாட்டை நம்பித்தான் இருக்கிறது. அரிசி கேட்டு இப்போது நமது நாட்டிடம் தான் உதவி கேட்டுள்ளது. வங்கதேசத்தில் வெள்ளம் மற்றும் நெருக்கடி காரணமாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
வங்கதேசத்தில் பொதுமக்களுக்கு வழங்கும் உணவு தானியங்களுக்காக இந்தியாவிடம் உதவி கேட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக இந்தியா வங்கதேசத்துக்கு 27 ஆயிரம் டன் அனுப்பியுள்ளது. மேலும் இது கப்பல் மூலம் இந்தியாவிலிருந்து வங்கதேசத்தில் உள்ள சிட்டாங் துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதுகுறித்து வங்கதேசத்து அதிகாரி கூறுகையில் இந்த அரிசி ஒப்பந்தம் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.