Bangladesh-Russia: வங்கதேச அதிபர் முகமது யூனுஷ் ரஷ்யாவின் அரசு நிறுவனத்தின் மீது 5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஊழல் புகாரை சுமத்தியிருக்கிறார்.
வங்க தேசத்தில் புதிதாக ரூப்பூர் அணுமின் நிலையம் கட்டும் ஒப்பந்தம் ரஷ்யாவின் அரசு நிறுவனம் செய்து இருந்து. இந்த அணுமின் நிலையம் பாப்னா மாவட்டத்தில் பத்மா நதிக் கரையில் அமைய உள்ளது. இந்த இடம் வங்க தேச தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் வடமேற்கில் 160 கி மீ தொலைவில் இருக்கிறது. இந்த அணு மின் நிலையத்தின் மூலம் ஒரு ஆண்டுக்கு 16 மில்லியன் யூனிட் மின்சாரத்தை தயாரிக்க முடியும்.
இந்த அணு மின் நிலையத்தின் உள் கட்டமைப்பை ரஷ்யா நிறுவனமான ரோஷடமின் (Rosatom) இன்ஜினியரிங் பிரிவு அட்மேனர்கோமாஷ் (Atomenergomash)கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அரசு நிறுவனத்தின் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறது. அதாவது ரஷ்ய நிறுவனம் அணுமின் நிலையம் கட்டுவதாக சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஊழல் செய்து இருக்கிறது.
மேலும், அணுமின் நிலையத்திற்கு கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் பற்றிய தகவல்கள் வெளிப்படைத்தன்மை இல்லை என அறிவித்து வங்க தேச இடைக்கால முகமது யூனுஷ் அரசு. இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து ரஷ்ய அதிபர் புதின் சர்வதேச நீதிமன்றத்தில் வங்கதேச அரசு மீது வழக்கு தொடரப்போவதாக அறிவித்து இருக்கிறார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே தற்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிபர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டு நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஷ்-ன் இ டை கால ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.