வங்க தேசத்தில் வெடித்த மதக் கலவரம்!! இந்துக்கள் மீது கொலைவெறி தாக்குதல்!!

0
160
Bangladeshi Hindu saint Sinamai Krishnadas's lawyer has been brutally attacked by protesters
Bangladesh:வங்கதேச இந்து மத துறவி சினமாய் கிருஷ்ணதாஸ் வழக்கறிஞரை போராட்ட காரர்கள் கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்  இட ஒதுக்கீடு தொடர்பாக  பேரணி  நடந்தது.அந்த பேரணியில் இந்துக்கள் மதத்தினர்களுக்கு இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவர் சினமாய் கிறிஷ்ண தாஸ் தலைமையேற்று நடத்தினர். அதில் அவர் வங்கதேச கொடி மீது காவி கொடி ஏற்றி இருந்தார். அது  பெரிய பெரிய பூகம்பமாக வெடித்தது.
இந்துக்கள் அதிகம் வாழும் நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இங்கு நிலவும் அசாதரண சூழல் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருக்கிறார். இதனால் அங்கு இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் என்பவர் அவசரகால பிரதமாராக இருக்கிறார்.
இந்த பதற்றமான சூழலுக்கு காரணமாக இந்து மத துறவி சினமாய் கிருஷ்ணதாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து இருந்தது வங்க அரசு. இந்த நிலையில்
கடந்த நவம்பர் 25 ஆம் தேதி டாக்கா விமான நிலையத்தில் கைது செய்தது தான் காரணம் என சொல்லப்படுகிறது. எனவே அவருக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்து வருகிறது. இந்த நிலையில்  அவருக்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கறிஞர் ராமேன் ராய் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் போராட்டக்காரர்கள்.
மேலும் அங்கு இந்துக்கள் மீது தாக்குதல் நடப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வங்க தேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மீது வன்முறை நடந்து வருகிறது.